;
Athirady Tamil News

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது

0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அது செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா ஏக்னலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்ததைத் தொடர்ந்து, இன்று (10) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக்குக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பைத் தொடர்ந்து ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.