;
Athirady Tamil News

பிஸ்லெரி நீர் குடிக்க உகந்ததன்று: இந்தியா முழுதும் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் சோதனை

0

புதுடெல்லி: பிஸ்லெரி நிறுவனக் குடிநீரின் பாதுகாப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் மாதிரிகளைச் சோதிக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பிஸ்லெரியின் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று பரிசோதிக்கப்பட்டபோது, அது குடிக்க உகந்ததன்று எனக் கண்டறியப்பட்டது.

அதனால், நிறுவனத்தின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆணையம் ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்ட குடிநீர்த் தொகுப்புகளை ஆணையம் மீட்டுக்கொண்டது.

ஆயினும், அடுத்தகட்ட சோதனைகளில் பிஸ்லெரி மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப இருப்பது தெரியவந்தது என அரசாங்க வட்டாரங்கள் ராய்ட்டர்சிடம் கூறின.

ஆணையம் சேகரித்த ஆறு மாதிரிகளில் ஐந்து தரநிலைகளுக்கு ஏற்ப இருந்ததாகவும் ஆறாவது மாதிரியில் புரோமேட் அளவு வரம்பைவிட அதிகமாக இருந்ததாகவும் அது குறிப்பிட்டது. புரோமேட் வேதிப்பொருளை மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் கொண்டதாக அனைத்துலகப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.