;
Athirady Tamil News

வலி. மேற்கு விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறியது: ரூ. 25 இலட்சம் ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட நெடுங்குளம் – களிக்கரைக்குளம் வாய்க்கால்!

0
யாழ்ப்பாணம் , வலிகாமம் மேற்கில் முதல் கட்டமாக 25 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு , புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற  நெடுங்குளம் – களிக்கரைக்குளம் வாய்க்காலை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிபவானந்தராசா நேரில் சென்று பார்வையிட்டார். 
நீண்டகாலமாக இப்பகுதி விவசாயிகள் எதிர்கொண்டுவந்த நீர்ப்பாசன மற்றும் வெள்ளப் பாதிப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கும் வகையில் வாய்க்கால் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாய நிலங்களுக்கான நீர்வழிப்பாதைகள் சீரமைக்கப்பட்டு, விவசாய நடவடிக்கைகள் மேம்படுவதுடன், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளையும் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.