;
Athirady Tamil News

ஒரே காதலனுக்காக போட்டி ; 2 இளம்பெண்கள் பேருந்து நிலையத்தில் செய்த செயல்

0

இந்தியாவின் திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேருந்து நிலையத்தில் ஒரே இளைஞரைக் காதலித்து வந்த இரு வடமாநில இளம்பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அவிநாசி, பெருமாநல்லூர், காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

 வாக்குவாதம்

இந்த நிலையில், வார விடுமுறையான அவிநாசி பேருந்து நிலையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் திரண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த இரு இளம்பெண்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்த இளைஞர் ஒருவர் மோதலைத் தடுக்க முயன்றபோதிலும், இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதன்போது, இருவரும் அவிநாசி அருகே தங்கியிருந்து பின்னலாடை நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதுடன், ஒரே இளைஞரைக் காதலித்து வந்தமையும் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞருடன் மற்றொரு பெண் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட ஒருவர், இது தொடர்பில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த இளைஞர் இருவரையும் சமாதானப்படுத்தி தனித்தனி பேருந்துகளில் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், இரு இளம்பெண்களும் பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட காட்சிகளை அங்கிருந்தவர்கள் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.