;
Athirady Tamil News

இந்திய பாதுகாப்பு அமைச்சர் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

0

இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வியாழக்கிழமை (10) நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.

தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்த ஆன்மிக நிகழ்வில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

உத்தியோகபூர் விஜயம் நிறைவு
இந்த வழிபாட்டில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர் ஆலய நிர்வாக சபைத் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

அதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு இன்று (10) பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுள்ளார்.

தனது இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.