;
Athirady Tamil News

கரூர் துயரம் ஓராண்டு நிறைவு.., சோகத்தை சுமந்து நிற்கிறோம்- முதலமைச்சர் விஜய் உருக்கம்

0

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பேசினார்.

விஜய்யை காண ஏராளமானோர் திரண்டதால், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் ஒருவரையொருவர் தள்ளியபடி நிலைதடுமாறினர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அப்போதைய தமிழக அரசு, தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் நிதியுதவி மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் துயரத்தின் முதலாமாண்டு நினைவு நாளை அடுத்து முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி தனது வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள பதிவு

“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த வருடம்.

இதே நாள்.

அதாவது 2025 செப்டம்பர் 27.

என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.

நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.

நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.