;
Athirady Tamil News

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவம் ; யாழ் மாநகர முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்

0

யாழ். நல்லூரில் ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.

திருவுருவச்சிலை அமைந்திருந்த இடத்திற்கு நேற்றுக்காலை 6.30 மணியளவில் சுமார் 15 பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்திருந்ததோடு, சிலையை அகற்றி அங்கிருந்து தமது வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.

நினைவேந்தல்
திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என யாழ் மாநகர முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவித்தார்.

சிலை அகற்றப்பட்டமைக்கு தமிழரசு கட்சியும் உடந்தை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அது குறித்து விளக்கமளிப்பதற்காக ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ் மாநாகர சபை உறுப்பினர் ஒருவர் முன்வைத்த யோசனை ஒன்றுக்கு அமைய தற்காலிகமாக அந்த சிலையை வைக்கவும், நினைவேந்தல் நிகழ்வை நடத்தவும் சபை ஏகமனதாக தீர்மானித்திருந்ததாக குறிப்பிட்டார்.

சிலையை பொலிஸார் அகற்றியமைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், சிலையை அகற்றும் எண்ணம் தமிழசுக் கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.