;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவர் தின நிகழ்வு

0

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவர் தின நிகழ்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் குழந்தை சிகிச்சை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறார்களுக்கான சிறுவர் தின நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விடுதி இலக்கம் 11-இல், பேராசிரியர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவபீட மாணவர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விடுதிகளில் சிகிச்சை பெற்று வரும் சிறார்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்வுகளில் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு அவர்கள் மகிழ்விக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.