;
Athirady Tamil News

பருத்தித்துறை இரத்தவஙகியில் தொடரும் குருதி தட்டுப்பாடு – வல்வெட்டித்துறை இரத்ததான முகாமில் பங்கேற்க அழைப்பு!

0
பருத்தித்துறை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாடு தொடரும் நிலையில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் இடம்பெறும் இரத்ததான நிகழ்வில் பங்கேற்க தன்னார்வ குருதி கொடையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 89 வது இரத்ததான நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல்  வல்வெட்டித்துறை – நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

பருத்தித்துறை இரத்த வங்கி பிரிவு மருத்துவ குழுவினர் பங்கேற்பில் இடம்பெற உள்ள இவ் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக் கொடை வழங்க விரும்புவோர்  0779911131 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து உதவுமாறும், குருதிக்கொடை வழங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் குருதி கொடையாளர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட உள்ளதா க வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் தலைவர் பா. வீரசுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.