;
Athirady Tamil News

சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து – 6 பேர் பலி

0

ஹமில்டன்,

சிறிய ரக விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

வட அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு பெர்முடா. இந்த தீவு இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற தீவு ஆகும்.

விமானம் மாயம்

இந்நிலையில், பெர்முடாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகருக்கு நேற்று கல்ப்ஸ்டிரீம் ஜி 100 சிறிய ரக விமானம் புறப்பட்டது. ஏர் ஆம்புலன்சாக செயல்பட்ட அந்த விமானத்தில் 6 பேர் பயணித்தனர்.

விமானம் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் நன்டக்கெட் தீவு அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் மாயமானது.

6 பேர் பலி

இதையடுத்து, மாயமான ஆம்புலன்ஸ் விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால், விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்தது தெரியவந்துள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை, கடலில் விழுந்த ஆம்புலன்ஸ் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, 6 பேரின் உடல்களும் இதுவரை மீட்கப்படவில்லை. மேலும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.