;
Athirady Tamil News

இளைஞர்களுக்காக ‘டேட்டிங்’ செயலி அறிமுகம்: சிங்கப்பூர் அரசு அதிரடி

0

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 0.87 சதவீதமாக வீழ்ந்த நிலையில், தற்போது அரசு சார்பில் இளைஞர்களுக்காக ‘பர்ஸ்ட் டேட்’ என்ற டேட்டிங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிறப்பு விகிதம் குறைவு

இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து வருவது, சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகையை நிலையாக வைக்கத் தேவையான 2.1 மாற்று நிலையை விட பிறப்பு விகிதம் மிகக் குறைந்துள்ளதால், நாடுகள் பணக்கார நாடுகளாக மாறுவதற்கு முன்பே முதியோர் நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தென் மாநிலங்களின் அதிரடி சலுகைகள்

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்த விகிதம் 1.4 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. (அதாவது 100 பெண்களுக்கு 140 குழந்தைகள்). குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் மாநிலங்கள் தற்போது சலுகைகளை அள்ளி வீசுகின்றன. ஆந்திராவில் 3-வது குழந்தைக்கு ரூ.30 ஆயிரமும், 4-வது குழந்தைக்கு ரூ.40 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, 3-வது குழந்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளித்துச் சட்டம் இயற்றியுள்ளது.

‘டேட்டிங்’ செயலி அறிமுகம்; சிங்கப்பூர் அரசு அதிரடி

சீனா, ரஷியா, தென்கொரியா போன்ற நாடுகள் குழந்தை பெற ரொக்கப்பணம் அளிக்கும் நிலையில், பிறப்பு விகிதம் 0.87 சதவீதமாக வீழ்ந்த சிங்கப்பூரில் அரசு சார்பிலேயே ‘பர்ஸ்ட் டேட்’ என்ற டேட்டிங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் ‘சிங்பாஸ்’ மூலம் மட்டுமே பதிய முடியும் என்பதால் இதில் போலி கணக்குகளுக்கு இடமில்லை. நோபல் பரிசு பெற்ற கணித சூத்திரத்தின் அடிப்படையில், தகுதியான ஒரே ஒரு இணையை மட்டுமே இந்தச் செயலி பரிந்துரைக்கும்.

21 முதல் 35 வயதுடைய அரசு ஊழியர்களுக்கு சோதனை

முதற்கட்டமாக 21 முதல் 35 வயதுடைய அரசு ஊழியர்களுக்குச் சோதனை முறையில் இது தொடங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்குப் பாடம் புகட்டும் சிங்கப்பூரின் இந்த விஞ்ஞானப்பூர்வ முயற்சி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.