;
Athirady Tamil News

வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மற்றும் பெற்றோரை இழந்த 167 குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கி வைப்பு

0

வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மற்றும் பெற்றோரை இழந்த 167 குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கி வைப்பு

வவுனியா மாவட்டத்தில் 167 குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கும் முகமாக காசோலைகள் வழங்கும் நிகழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இதுவரை நிரந்தர வீடின்றி வாழ்ந்து வரும் 147 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி காசோலைகள் வழங்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக, பெற்றோரை இழந்து சிறுவர் இல்லங்களில் பராமரிப்பைப் பெற்று, தற்போது 18 வயதை பூர்த்தி செய்துள்ள 20 பேருக்கும் வீடு ஒன்றிற்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் வீட்டு உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர அவர்கள்,

2027 ஆம் ஆண்டு, அதாவது அடுத்த ஆண்டிற்குள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இதுவரை நிரந்தர வீடின்றி வாழ்ந்து வரும் அனைவருக்கும் நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

உலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.