;
Athirady Tamil News

யாழில் நால்வர் கைது

0

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 390 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் உடுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.