;
Athirady Tamil News

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு

0

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வு எல் நினோ என அழைக்கப்படுகிறது. இது வழக்கமான நிகழ்வு என சொன்னாலும், இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் கடும் வறட்சி, வெப்பநிலை உயர்வோடு, மற்ற பகுதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு, புயல்கள் உள்ளிட்டவை உருவாகும் என்று எச்சரிக்கப்படுகிறது.

எல்நினோ காரணமாக உலகில் உள்ள பெருங்கடல்களில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச கடல் மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. இதன்படி, கடந்த மாதம் 29.70 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. 1979 ஆம் ஆண்டு முதல் கடல் வெப்பநிலையை தினசரி அடிப்படையில் கண்காணித்து வரும் கோப்பர்நிக்கஸ் அமைப்பு இதுவரை பதிவு செய்ததிலேயே இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 29.09 டிகிரி செல்சியஸ் என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. தற்போது அதையும் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக உள்ள கடல்களின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சூப்பர் எல் நினோ கடல் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும் முக்கிய காரணமாக மாறி உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.