;
Athirady Tamil News

முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வுச் சைக்கிள் பவனி நெடுந்தீவில்!

0

முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான 1890 என்ற தொலைபேசி இலக்கத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டு, முன்னெடுக்கப்படும் 1,890 கிலோமீற்றர் சைக்கிள் பவனி நேற்றைய தினம் திங்கட்கிழமை நெடுந்தீவை சென்றடைந்தது

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்பாளர்கள் இணைந்துகொண்டுள்ள இந்த விழிப்புணர்வுப் பயணம், முதியவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறந்த சமூகப் பணியாகும்.

நெடுந்தீவில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் கலந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.