;
Athirady Tamil News

2,100-ம் ஆண்டுக்குள் மனிதகுலம் அழியும் அபாயம் உள்ளது: ஆய்வில் எச்சரிக்கை

0

உலகில் அதிகரித்து வரும் அணு ஆயுதப் போர் அபாயங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு ஆகியவை எதிர்காலத்தில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று பிரபல மருத்துவ இதழான ‘லான்செட்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. 2100-ம் ஆண்டுக்குள் மனிதகுலத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுத மோதல்கள் உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளன. அதேபோல், ஏஐ தொழில்நுட்பம் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டால் அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பயன்பாடு

இந்த அபாயங்களைத் தவிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. சர்வதேச ஒத்துழைப்பு, பொறுப்பான தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் உரிய கொள்கை முடிவுகள் மூலம் எதிர்கால அச்சுறுத்தல்களைக் குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, தொற்றுநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட மேலும் பல்வேறு அச்சுறுத்தல்களும் அந்த ஆய்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மிகக் கடுமையாக இருக்கக்கூடும்

எனினும், 2100-ம் ஆண்டுக்குள் மனிதகுலம் அழிந்துவிடும் என்று இந்த ஆய்வறிக்கை உறுதியாகக் கூறவில்லை. இத்தகைய அபாயங்கள் நிகழும் சாத்தியம் குறைவாக இருந்தாலும், அவற்றின் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கக்கூடும் என்பதால் உலக நாடுகள் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.