அசோக் அபேசிங்க இராஜிநாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அசோக் அபேசிங்க, கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்றையதினம் (12) எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இத்தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த காலம் முதலும், ஐ.ம.ச. ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலும் சஜித் பிரேமதாசவுடன் நெருக்கமாகப் பணியாற்றியமைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், கட்சித் தலைமை தனக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.