;
Athirady Tamil News

இலங்கையில் 9 மாதங்களில் 364 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்!

0

நாட்டில் இந்த ஆண்டின் கடந்த முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 364 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 114 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் முறைப்பாடுகள்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய 9,613 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் அதிகளவிலான (1,554 முறைப்பாடுகள்) கடந்த செப்டம்பர் மாதத்திலேயே பதிவாகியுள்ளன.

இந்த முறைப்பாடுகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான 169 முறைப்பாடுகள், பாலியல் அத்துமீறல் தொடர்பான 8 முறைப்பாடுகள், சிறுவர் கடத்தல் தொடர்பான 40 முறைப்பாடுகள், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களைப் பயன்படுத்துவது தொடர்பான 37 முறைப்பாடுகள் மற்றும் சிறுவர்களைக் கொடூரமாக நடத்துவது தொடர்பான 1,889 முறைப்பாடுகள் அடங்குகின்றன.

இது தவிர, இந்த ஆண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் சிறுவயது கர்ப்பம் தொடர்பான 51 முறைப்பாடுகள், சிறுவர் திருமணம் தொடர்பான 9 முறைப்பாடுகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.

அதுமட்டுமல்லாது , சிறுவர்களுக்கு எதிரான இணையவழி வன்முறைகள் தொடர்பான 196 முறைப்பாடுகளும், குடும்ப வன்முறைகள் தொடர்பான 46 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.