;
Athirady Tamil News

திக்கம் வடிசாலையை மீள் இயக்க நடவடிக்கை

0
திக்கம் வடிசாலையை மீள் இயக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திக்கம் வடிசாலையை மீள இயக்குவது தொடர்பான விசேடக் கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாகத் தீர்வின்றித் தொடரும் திக்கம் வடிசாலை விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட்டு, அது மீண்டும் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் சட்டரீதியான அம்சங்களை ஆராய்ந்து உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமானது

திக்கம் வடிசாலையை நிர்வகிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைத் தங்களிடம் வழங்குமாறு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதனை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகளைத் தீர்மானிக்கும் முன், நடைமுறையிலுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலுவை ஆராய வேண்டியுள்ளது என தெரிவித்தார்

இக்கலந்துரையாடலில்  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் , வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. றஜீவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், முகாமையாளர் மற்றும் உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணிகள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், அமைச்சர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.