;
Athirady Tamil News

ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள்!

0

மஸ்கட்,

ஓமன் நாட்டின் கடற்கரைப் பகுதியில் அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் 2 துள்ளிக்குதித்து நீந்திச் சென்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலில் தெரிந்த அதிசயம்

ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற குந்தாப் கடற்கரையில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகள் சிலர் படகு சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது கடலில் சாதாரண சாம்பல் நிற டால்பின்கள் கூட்டமாக நீந்திச் சென்றன. அவற்றுடன் சேர்ந்து முற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அரிய டால்பின்கள் 2 துள்ளிக்குதித்து நீந்திச் சென்றுள்ளன. இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியமடைந்து தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்தனர்.

 

வைரல் வீடியோ

சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் உலகளவில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக அமேசான் போன்ற நன்னதிப் படுகைகளில் மட்டுமே பிங்க் டால்பின்கள் வாழும் என கருதப்படும் நிலையில், ஓமன் கடல் பகுதியில் இது தென்பட்டது கடல்சார் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அறிவியல் காரணம் என்ன?

இது குறித்து கடல்வாழ் உயிரின நிபுணர்கள் கூறுகையில், “இது ‘இந்தோ-பசிபிக் கூன் டால்பின்’ வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்த வகை டால்பின்கள் பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருந்தாலும், வயது முதிர்ச்சியின் காரணமாகவோ அல்லது உடலின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்த தோலின் மேல் ஏற்படும் இரத்த ஓட்ட மாறுபாட்டினாலோ இளஞ்சிவப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.