;
Athirady Tamil News

கொக்குத்தொடுவாயில் காட்டு யானைகள் அட்டகாசம்; பிரதேச மக்கள் கவலை

0

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தொடர்ச்சியாகப் புகுந்து வரும் காட்டு யானைகளால், நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுவருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த பகுதியில் யானை வேலிகள் அமைக்கப்படாத நிலையில், காட்டு யானைகளின் தொடர் ஊடுருவலால் விவசாயிகள் பாரிய பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

எனவே, காட்டு யானைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.