;
Athirady Tamil News

சவுதி மீதான தாக்குதலை வீடியோ எடுக்கக்கூடாது; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

0

புதுடெல்லி

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையம், எண்ணெய் வயல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் ஹவுதி கிளர்ச்சியா ளர்கள், பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ந்து டிரோன் மற் றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால், அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இந்திய தூதரகம் சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்பு இயக்குனர கம் வெளியிட்ட அறிவிப்பை பகிர்ந்து வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள், அந்த நாட்டின் உள்ளூர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து அழிப்பது தொடர்பான நிகழ்வுகளை படம் பிடிப்பதையோ அல்லது அது குறித்த தகவல்களை வெளியிடுவதையோ தவிர்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்வுகளை படம்பிடிப்பது, அது குறித்த தகவல்களை வெளியிடுவது அல்லது பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்” என அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.