;
Athirady Tamil News

கவந்தீச யானைக்கு அஞ்சலி நிகழ்வு

0

video-https://wetransfer.com/downloads/fe94a2bf665440171006d7450e177a4d20261025141933/89716f?t_exp=1793197173&t_lsid=58a57020-3732-4adc-9bb3-36a861b68412&t_network=link&t_rid=ZW1haWx8Njc0OTRkNDZiNjM1NTFjNmY2NTg4ZTRi&t_s=download_link&t_ts=1792937973

இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த ‘கவந்தீச’ யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் நேற்று (25) நடைபெற்றது.

இவ்வஞ்சலி நிகழ்வை அம்பாறை சாஸனாரக்ஷக பலமண்டலத்தின் செயலாளரும், நாமல் ஓயா கல்லூரியின் பிரதி அதிபரும், கல் ஓயா நதி பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், நாமல் தாலவ சைலபாம்பராம விகாரையின் ஸ்தாபகருமான வணக்கத்திற்குரிய சாஸ்திரவேதி கம்பஹ நாரத தேரர் தலைமையில் மத அனுஷ்டானங்களுடன் நடத்தப்பட்டது.

ஊடகவியலாளர்   சுசந்த அமரபந்து அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் செல்வி யமுனா கொனாரா அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார்.

நிகழ்வின் போது, உயிரிழந்த கவந்தீச யானையின் நினைவாக மதக் கிரியைகள் இடம்பெற்றதுடன், வனவிலங்குகள் மற்றும் இயற்கையின் பாதுகாப்புத் தொடர்பிலும் விசேட கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.