;
Athirady Tamil News

க்ரிஷ் வழக்கு தொடர்பில் இன்று மேல் நீதிமன்றில் முன்னிலையாகும் நாமல்

0

ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இன்று (28) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கிடையில், கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக நாமல் ராஜபக்சவின் பிணை மனு மீதான பரிசீலனை, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல்

எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் பல பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதிமன்ற விசாரணையில் குற்றப்பத் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) நேற்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதிகளுக்கு எதிரான 24 குற்றச்சாட்டுகளை இக் குற்றப்பத்திரிகைகள் உள்ளடக்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.