;
Athirady Tamil News

6 ஆயிரம் அடி உயரத்தில்… விமானம் மீது மோத வந்த மர்ம பொருளால் பரபரப்பு

0

லண்டன்

6 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, மோத வந்த பளபளப்பான மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் ஒன்று வழக்கம்போல் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் 6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

50 அடி உயரம்
விமானத்தின் வலது புற இறக்கையின் அருகே, 50 அடி உயரத்திற்கு மேலே, வெள்ளி போன்ற நிறத்தில் பளபளக்கும் உலோகம் ஒன்று மோதுவது போன்று நெருங்கி வந்து பின்னர் கடந்து சென்றது.

இதனை விமானி கவனித்து உள்ளார். எனினும், அதனால் பாதிப்பு ஏதும் நேரிடாத சூழலில் மற்றும் நேரமும் இல்லாத நிலையில், தொடர்ந்து இயக்கி சென்றுள்ளார். 8 மணிநேர பயணத்திற்கு பின்னர் விமானம் பாதிப்பு எதுவுமின்றி அமெரிக்காவை சென்றடைந்தது. எனினும், இதுபற்றி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார்.

ரொட்டித்துண்டுகள்
அவர் கூறும்போது, 4 ரொட்டித்துண்டுகள் ஒன்றாக சேர்ந்த அளவுக்கு அந்த பொருள் இருந்தது. அது டிரோனாக இருக்கலாம். ஆனால், உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை வாரிய குழுவினர் அளித்த தகவலில், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்துக்கான பாதுகாப்பு விசயத்தில் அதிக ஆபத்து பிரிவில் இந்த மர்ம பொருளை வகைப்படுத்தி உள்ளனர். மிக விரைவாக பறந்து சென்றது. கடவுள் செயலால் பெரிய அளவிலான விமான விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.