;
Athirady Tamil News

கம்போடியாவில் அமெரிக்க சொகுசு கப்பல் பயணம் ரத்து: 200 பயணிகள் தவிப்பு

0

புனோம் பென்,

கம்போடியாவில் அமெரிக்க சொகுசு கப்பலின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 200 பயணிகள் கம்போடியா துறைமுகத்தில் தவித்து வருகின்றனர்.

அமெரிக்க சொகுசு கப்பல்
அமெரிக்காவின் புளோரிடா நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஒடிசி’ என்ற சொகுசு கப்பல், உலகை சுற்றி வர 3 ஆண்டு காலப் பயணத்தை மேற்கொண்டிருந்தது. இதற்காகப் பயணிகள் தங்களின் ஆயுட்காலச் சேமிப்பை முதலீடு செய்து அந்த கப்பலிலேயே தங்கி வாழ்ந்து வந்தனர்.

சேவை திடீர் நிறுத்தம்; அறிவிப்பு
இந்த நிலையில், ஆசியப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் ஒரு அறைக்கான மாதாந்திர எரிபொருள் செலவு சுமார் ரூ.1½ லட்சத்தில் இருந்து (1,800 டாலர்) ரூ.7 லட்சம் வரை (8,000 டாலர்) எகிறியது. இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியாமல், கம்போடியத் துறைமுகத்தில் வைத்து தனது சேவையை திடீரென நிறுத்துவதாக கப்பல் நிறுவனம் அறிவித்தது.

பயணிகள் தவிப்பு
இதன் காரணமாக கப்பலில் தங்கியிருந்த பயணிகள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் 15 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள், அடுத்ததாக எங்குச் செல்வது என்று தெரியாமல் கம்போடியத் துறைமுகத்தில் தவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.