;
Athirady Tamil News

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு தொடர்பிலான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (29) பிற்பகல் 4 மணி முதல் நாளை (30) பிற்பகல் 4 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டம்
எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருக்கவும் (அம்பர் எச்சரிக்கை): இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, இரத்தினபுரி, பெல்மடுல்ல, எலபாத மற்றும் ஓபநாயக்க.

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள் எச்சரிக்கை): காலி மாவட்டம்: தவலம, கரந்தெனிய, நியாகம, நெலுவ மற்றும் எல்பிட்டிய.

நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், அம்பகமுவ கோரளை. களுத்துறை மாவட்டம்: தொடங்கொட, புலத்சிங்ஹள

இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, நிவித்திகலை, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியகொட மற்றும் பலாங்கொடை.

கண்டி மாவட்டம்: உடுநுவர, யடிநுவர.

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்ல. எனவே, குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் சாத்தியமான மண்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.