;
Athirady Tamil News

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

0

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டுத் தீர்மானத்திற்கு அமைவாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான மற்றும் அதிகரிக்கப்பட்ட வரிச் சுமைக்கு எதிராகவும், விசேட தெரிவு பெறுபவர்களுக்கான கொடுப்பனவுகள், மாணவர்களின் பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்கான கொடுப்பனவுகள், மேலதிக பயணம் சம்பந்தமான கொடுப்பனவுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரிச்சுமைகள் தொடர்பான கோரிக்கைகள், பல்கலைக்கழக ஆசிரியர்களின் குழந்தைகளின் முதலாம் ஆண்டு அனுமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவாக அதற்கு வலுசேர்க்கும் வகையில் வவுனியாவிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.