;
Athirady Tamil News

போஸ்னியா: ஐரோப்பிய யூனியன் அமைதிப்படையினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – 3 வீரர்கள் பலி

0

சாரயேவோ,

போஸ்னியாவில் ஐரோப்பிய யூனியன் அமைதிப்படையினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு போஸ்னியா அண்ட் எர்செகோவினா. இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு நாடுகள் இணைந்து அமைதிப்படையை உருவாக்கியுள்ளது. இந்த அமைதிப்படையில் 1,200 ராணுவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்து – ராணுவ வீரர்கள் 3 பேர் பலி
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் அமைதிப்படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் 15 பேர் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணிக்காக போஸ்னியாவுக்கு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். போஸ்னியாவின் பிரகோ பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த ராணுவ வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.