;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

0
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கு இடையில் இடம்பெற்ற கைக்கலப்பில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.
பின்னர் 2023ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் கொலை குற்றம் சாட்டப்பட்டு , வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
குறித்த வழக்கு விசாரணைகளில் எதிரியை குற்றவாளியாக கண்ட மேல் நீதிமன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.