;
Athirady Tamil News

மொத்த உலகமும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் : ரஷிய அதிபர் புதின் திடீர் எச்சரிக்கை

0

பால்டிக் கடலில் ரஷியாவின் கப்பல் போக்குவரத்தை முடக்க நினைத்தால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனம்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 4½ ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது பால்டிக் கடல் பகுதியின் பக்கம் திரும்பியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் ஐரோப்பிய நாடுகள், பால்டிக் கடல் பகுதியில் ரஷியாவின் கப்பல் போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போட முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுநதுள்ளன.இந்நிலையில், மாஸ்கோவில் நடைபெற்ற ரஷிய-ஆப்பிரிக்க உச்சி மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஷிய அதிபர் புதின், ஐரோப்பிய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சர்வதேச பொருளாதார நெருக்கடி

பால்டிக் கடலில் ரஷியாவின் கப்பல் போக்குவரத்தை முடக்க நினைத்தால், அது அமெரிக்கா-ஈரான் மோதலின் போது ‘ஹார்முஸ் நீரிணையில்’ ஏற்பட்ட உலகளாவிய கப்பல் போக்குவரத்து முடக்கத்தைப் போன்ற பெரும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியை விட அதிக பாதிப்பை ஐரோப்பாவில் ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.”பால்டிக் கடலிலும் ஹார்முஸ் நீரிணை போன்ற ஆபத்தான சூழல் உருவாக வேண்டும் என்று யாராவது விரும்புகிறார்களா?” எனக் கேள்வி எழுப்பிய புதின், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ரஷியா ராணுவ ரீதியாகத் தயாராக உள்ளதாகவும், ஆனால் ஐரோப்பாவுடன் போரைத் தொடங்க ரஷியா விரும்பவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயார்

இந்த மோதல் தீவிரமடைந்தால் அதில் யாரும் வெற்றி பெற முடியாது, ஒட்டு மொத்த உலகமும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். இருப்பினும், பதற்றத்தைத் தணிக்க ஐரோப்பிய நாடுகளுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு பின்லாந்து அதிபர் அலெக்சாண் டர் ஸ்டப் மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் ஆகியோர் உக்ரைனுடன் கலந்தாலோசித்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து புதினுடன் தொலைபேசி மூலம் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புதினின் இந்த அதிரடி மிரட்டல் ஐரோப்பிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.