யாழ்ப்பாணத்தில் தனது தாய் மற்றும் மாமனின் சடலங்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் வசித்து வந்த பெண்ணொருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள் ளதுடன் , சடலங்களையும் பொலிஸார் மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்
வேலணை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் பாலசுந்தரம் (வயது 74) அவரது சகோதரியான முத்துலிங்கம் புவனேஸ்வரி (வயது 72) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்
சடலங்களாக மீட்கப்பட்ட பாலசுந்தரம், அவரது சகோதரியான புவனேஸ்வரி ஆகியோருடன் , புவனேஸ்வரியின் மகளான 45 வயதுடைய பெண்ணும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதனை அடுத்து , அயலவர்கள் குறித்த வீட்டிற்கு சென்ற வேளை வீட்டினுள் ஒருவரும் மற்றையவர் வீட்டின் வெளியுமாக இருவரும் வெவ்வேறு இடங்களில் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை வீட்டில் இவர்களுடன் வசித்து வந்த புவனேஸ்வரியின் மகள் அதேவீட்டில் இருந்துள்ளார் .
சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வீட்டில் வசித்து வந்த புவனேஸ்வரியின் மகள் சித்த சுவாதீனமற்றவர் என தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்கு ஏதுவாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் , சட்டவைத்திய அதிகாரி , தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
வீட்டினுள் காணப்பட்ட புவனேஷ்வரியின் சடலம் மிக உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதுடன் , வீட்டின் வெளியே காணப்பட்ட பாலசுந்தரத்தின் சடலம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்க கூடிய சாத்திய கூறுகள் காணப்பட்டுள்ளன.
சடலங்களை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப் புக்கான காரணங்களை உறுதியாக கூற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
