;
Athirady Tamil News

வங்கி அட்டைகள் மூலம் பேருந்துகளில் பயண கட்டணம் செலுத்தும் முறை! வெளியான அறிவிப்பு

0

பொது பயணிகள் பேருந்துகளில் வங்கி அட்டைகள் (Credit Card / Debit Card) மூலம் பயண கட்டணம் செலுத்தும் முறை அடுத்த 6 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, நடத்துநர்களுக்கும் பயணங்களின் போது ஏற்படும் வாக்குவாதங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி
அதாவது பேருந்து பயணங்களின் போது நடத்துநர்களிடமிருந்து மீதமுள்ள ரூ. 2, 5, 10 போன்ற பணம் கிடைப்பதில்லை என பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் ஆணையம் கூறுகின்றது.

இந்த முன்னோட்ட திட்டம் நிறைவடைந்துவிட்டதாகவும், அட்டைகள் மூலம் பயணக்கட்டணம் செலுத்தும் முறை தொடங்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வங்கி அட்டைகள் ஊடாக பேருந்து கட்டணம் செலுத்தும் வசதியை வழங்குவதற்கு 07 தனியார் மற்றும் அரச வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.