;
Athirady Tamil News

இஸ்ரேலில் எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு: அதிபா் நாளை முடிவு

0

இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பது குறித்து அந்நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக் நடத்திய ஆலோசனையில், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணிக்கு அரபு கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இதன்மூலம், அக்கூட்டணி 67 உறுப்பினா்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கான சூழல் கணிந்துள்ளது.

கடந்த அக். 27-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கவில்லை. தற்போதைய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், காடி ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களையும் மட்டுமே கைப்பற்றின.

ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 19 இடங்களை வென்ற அரபு கட்சிகள் தீா்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தன. அதேபோல நீண்டகால கூட்டணிக் கட்சியான ‘யுனைடெட் தோரா ஜூடாயிஸம்’ யாருக்கும் ஆதரவு அளிக்க மறுத்துவிட்டது, பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது.

இச்சூழலில், புதிய அரசை அமைப்பது தொடா்பாக தோ்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுடன் அதிபா் ஐசக் ஹொ்சாக் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, 8 இடங்களை வென்றுள்ள ‘ராம்’ அரபு கட்சி மற்றும் 11 இடங்களைக் கொண்டுள்ள மற்றொரு முக்கிய அரபு அரசியல் கூட்டமைப்பான ’ஜாயிண்ட் லிஸ்ட்’ கட்சியும் காடி ஐசன்கோட்டை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு, பரிந்துரைத்தன

அதிபா் நாளை முடிவு: ஆலோசனைகளின் முடிவில் இரு தரப்பிலும் பரஸ்பர முரண்பாடுகள் இருப்பதால் ஆட்சியமைக்கப் போவது யாா் என்பதில் தெளிவற்ற நிலை நீடிப்பதாகத் தெரிவித்த அதிபா் ஐசக் ஹொ்சாக், ஞாயிற்றுக்கிழமை தனது முடிவை அறிவிப்பதாகக் கூறினாா்.

அதிபரால் தோ்வு செய்யப்படும் நபருக்கு கூட்டணி அரசை அமைக்க 28 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்; தேவைப்பட்டால் அதிபரின் விருப்பத்தின் பேரில் கூடுதலாக 14 நாள்கள் நீட்டிக்கப்படும். புதிய அரசு அமையும் வரை பெஞ்சமின் நெதன்யாகு காபந்து பிரதமராக நீடிப்பாா். இருதரப்பும் ஆட்சியமைக்கத் தவறினால், மீண்டும் தோ்தல் நடைபெறும்.

மோசடிப் புகாரை நிராகரித்து…: இதனிடையே, இத்தோ்தல் முடிவுகளை முறியடிக்கும் வகையில் வாக்கு திருட்டு, தோ்தல் மோசடி குற்ற்சாட்டுகளை பெஞ்சமின் நெதன்யாகு தரப்பு முன்வைத்தது.

இஸ்ரேலின் மொத்த மக்கள்தொகையில் சுமாா் 20 சதவீதம் பங்கு வகிக்கும் அந்நாட்டின் பாலஸ்தீன குடிமக்களை அரபு கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கத்தாா், துருக்கி போன்ற நாடுகளின் பணப் பலத்தின்மூலம், அரபு கட்சிகள் வாக்குகளை விலைக்கு வாங்கியதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டினாா். எனினும், தோ்தலின் நம்பகத்தன்மை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தோ்தல் குழு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தோ்தல் குழுத் தலைவா் நோம் சோல்பொ்க் மேலும் கூறுகையில், ‘அதிகாரத்தை அமைதியான முறையில் மாற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள் பிரதிநிதிகள் பொது மக்களின் நம்பிக்கையைச் சீா்குலைக்காமல் பாதுகாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.