;
Athirady Tamil News

சீன பெண் உளவாளியுடன் தொடர்பு..? என்விடியா தலைமை செயல் அதிகாரியிடம் விசாரணை

0

மனைவிக்கு தான் துரோகம் செய்துவிட்டதாகவும், தனது செயல்கள் தன் மனைவியையும், குழந்தைகளையும் காயப்படுத்திவிட்டதாகவும் ஜென்சன் ஹூவாங் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜென்சன் ஹுவாங், கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரீம் ஆகியோர் இணைந்து என்விடியா (NVIDIA) என்ற பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனமானது, வீடியோ கேம்களுக்கான நவீன கிராபிக்ஸ் செயலாக்க அலகை (GPU) முதன்முதலில் அறிமுகப்படுத்தியதோடு, கணினிக்கு தேவையான வன்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்கி வருகிறது.

என்விடியா நிறுவனம் தயாரித்து வரும் அதிநவீன குறைகடத்தி தொழில்நுட்பங்கள், சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா கட்டுப்படுத்தி உத்தரவிட்டது. இதன்மூலம் என்விடியா தயாரித்து வரும் மேம்பட்ட செயலிகள், சீனாவிற்கு கிடைப்பதை அமெரிக்கா தடுத்தது.

நெருங்கிய உறவு

இதற்கிடையில் சீனாவை சேர்ந்த ஆலிஸ் ஹூவாங்க் என்ற இளம்பெண்ணுடன், என்விடியா தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இந்த இளம்பெண் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட தரவு மைய நிறுவனமான ‘மெகாஸ்பீடு’ நிறுவனத்தின் நிர்வாகி ஆவார். சீன உளவாளியாக சந்தேகிக்கப்படும் ஆலிஸ், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து ரகசியமாக மென்பொருள் தகவல்களை சேகரித்து, அதனை சீனாவிற்கு அனுப்பி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆலிஸ் ஹுவாங், ஜென்சன் ஹுவாங்குடன் நெருக்கமான காதல் உறவைக் கொண்டிருந்ததாகவும், அதே வேளையில் சீனாவின் அரசு பாதுகாப்பு அமைச்சகத்திற்குத் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட என்விடியா சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்திருக்கலாம் என்ற சாத்தியக்கூறு தொடர்பாக மெகாஸ்பீடு நிறுவனமும் அமெரிக்காவின் விசாரணை வளையத்தில் உள்ளது.

மனைவிக்கு துரோகம்

இதுதொடர்பாக என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, தனது மனைவிக்கு தான் துரோகம் செய்துவிட்டதாகவும், தனது செயல்கள் தன் மனைவியையும், குழந்தைகளையும் காயப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஜென்சன் மற்றும் அவரது தலைமை குழுவின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாக என்விடியா நிறுவனம் கூறியிருக்கிறது. அத்துடன் ஜென்சன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அந்நிறுவனம் ஒரு சுயாதீன விசாரணையையும் தொடங்கியுள்ளது. சில சட்ட ஆலோசகர்களின் ஆதரவுடன் சுயாதீன இயக்குநர்களைக் கொண்ட குழுவின் மேற்பார்வையில் விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாக ஹுவாங் ஒப்புக்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.