;
Athirady Tamil News

யாழில் முன்பள்ளி சிறுமியை ஈவிரக்கமின்றி தாக்கிய ஆசிரியை

0

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவரைத் தனியார் முன்பள்ளி ஆசிரியர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள தனியார் முன்பள்ளி ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி
முன்பள்ளியின் ஆசிரியர் சிறுமியை கடுமையாகத் தாக்கியதில் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த ஆசிரியையை நேற்று (09) சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்ட ஆசிரியை உயர்மட்டத் தலையீட்டைத் தொடர்ந்து அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.