;
Athirady Tamil News

வங்காளதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா? புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம்

0

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து மீண்டும் வங்காளதேசம் திரும்புவதற்காக புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவரது பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம்

இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த மேட்ரிக்ஸ் சேம்பர்ஸ் சட்ட நிறுவனத்தின் மூலம் டெல்லியில் உள்ள வங்காளதேச தூதரகத்துக்கு ஷேக் ஹசீனா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனது வங்காளதேச குடியுரிமையின் அடிப்படையில் புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை விரைவாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒப்படைக்க வங்காளதேசம் வலியுறுத்தல்

இதற்கிடையே, ஷேக் ஹசீனாவை புதிய பாஸ்போர்ட் வழங்கி அனுப்புவதற்கு பதிலாக, இந்தியா – வங்காளதேசம் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்காளதேச அரசு வலியுறுத்தியுள்ளது.கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம், போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது. இத்தகைய சூழலில், ஷேக் ஹசீனா நாடு திரும்புவதற்காக முயற்சி மேற்கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.