;
Athirady Tamil News

ஹட்டனில் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

0

ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, ஹட்டன் பிலிஹத்தர பகுதியில் சுமார் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த வீடுகளுக்குள் 3 முதல் 4 அடி உயரம் வரை மழைநீரும் சேறும் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வீடுகளில் வசித்து வந்த மக்களை பெரும் சிரமங்களுக்கு மத்தியில், பிரதேச மக்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஹட்டன் ஓயாவை நோக்கி நீர் வடிந்தோடும் கால்வாய் அடைபட்டதன் காரணமாகவே, கால்வாய் பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அ தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினையால் தமது வீடுகள் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டிலிருந்த தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.