;
Athirady Tamil News

திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவிற்கு புதிய உழவு இயந்திரம் கையளிப்பு

0
2026ஆம் ஆண்டுக்கான PSDG நிதி மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றல் சேவையை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட உழவு இயந்திரம், திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் இவ் உழவு இயந்திரம் திண்மக்கழிவு அகற்றும் பணிக்காகச் சாரதியிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வீ. வினோகாந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான வீ. ஜெயசந்திரன், ஏ.எல்.எம். ஜிப்ரி, எம்.ஆர். ஆஷிக் அஹம்மட், ஏ.எச்.எம். காலித், எம்.ஐ.எம். றிஸ்விக்கான், வை.எல். பஸீர், எஸ்.எல்.எம். பஹ்மி, ஏ.எம்.எம். அப்னான், ஏ.சீ.எம். நயீம், ஐ.எம். ஹாதிக், ஏ. சதானந்தா, எஸ்.எல்.ஏ. நஸார், எம்.எல்.ஏ. கபூர் ஆகியோருடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச சபையானது 132 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 51 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கி, 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டு இயங்கி வருகிறது. இப்பிரதேசத்தில் சுமார் 33 வருடங்களுக்கும் மேலான பழமையான உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே இதுவரை காலம் திண்மக்கழிவு அகற்றல் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

தற்போது புதிய உழவு இயந்திரம் சேவையில் இணைக்கப்பட்டுள்ளமையால், பிரதேச மக்களின் திண்மக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றித் தூய்மையான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்குவதற்குப் பாரிய பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகத் தவிசாளர் சுட்டிக்காட்டினார்.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.