;
Athirady Tamil News

4 வயது சிறுவனின் உடல் பாகங்களை அறுத்தெடுத்த கொடூரன்: AI செயலி மூலம் தீட்டிய சதி திட்டம்

0

சத்தீஸ்கரில் 4 வயது அண்ணன் மகனை கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை அறுத்து எடுத்த குற்றத்திற்காக 27 வயது கூலித் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்

சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் சன்னா கிராமத்தில் உள்ள ஆற்று அணையின் அருகே தற்காலிக குடிசை அமைத்து வாழ்ந்து வந்த ராம்ஜீத் நாம்(36) என்ற கூலித் தொழிலாளி கடந்த நவம்பர் 6ம் திகதி தன்னுடைய 4 வயது சிறுவனை காணவில்லை என்பதை அறிந்து பீதியடைந்துள்ளனர்.

இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களுடன் இணைந்து மகனை தீவிரமாக தேடிய நிலையில், அவரது வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள குழி ஒன்றில் கம்பளியால் சுற்றப்பட்டு சிறுவன் ஒருவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கம்பளியை விலக்கி பார்த்த ஊர் மக்கள், சிறுவனின் சிறுநீரகங்கள், கண்கள், நுரையீரல்கள் ஆகிய உடல் உறுப்புகள் கொடூரமான முறையில் அறுத்து எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கவே, சன்னா காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சிக்கிய கொலையாளி, AI செயலியின் வழிகாட்டுதல்

விசாரணையில் சிறுவனின் தந்தையான ராம்ஜீத்தின் தாய் வழி மைத்துனரான வாசுதேவ் கோர்வா என்ற 27 வயது நபர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வேலைக்காக அடிக்கடி சன்னா கிராமத்திற்கு வரும் வாசுதேவ், குறுக்கு வழியில் உடனடியாக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் மனித உறுப்புகளை விற்றால் ரூ.20 லட்சம் வரை உடனடியாக சம்பாதிக்கலாம் என்று சமூக வலைதள வீடியோ ஒன்றை பார்த்துள்ளார்.

இதையடுத்து AI செயலி ஒன்றுடன் குரல் வழி உரையாடல் நடத்தி, இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகளை கேட்டறிந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) ராஜேஷ் குமார் படான்வர் வழங்கிய தகவலில்,   AI செயலியின் பேச்சுக்களை நம்பி உடல் பாகங்களை வாங்க டெல்லியில் இருந்து நேரடியாக சத்தீஸ்கருக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் வருவார்கள் என வாசுதேவ் முழுமையாக நம்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தொடர்பாக வாசுதேவ் எந்த மனிதரிடமும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாசுதேவ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.