;
Athirady Tamil News

நிலத்தடியில் பிரமாண்ட ஏவுகணை தளம் ; வீடியோ வடிவில் எச்சரிக்கை விடுத்த ஈரான்

0

அமெரிக்காவுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது புதிய நிலத்தடி ஏவுகணை தளத்தை திறந்து வைத்துள்ளதுடன், அதன் மூத்த ராணுவ தளபதிகள் அந்த வளாகத்தை சுற்றி பார்ப்பதையும் காட்டியுள்ளது.

ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட காணொளி காட்சிகளில், ஈரானின் ஆயுத படைகளின் தலைமை தளபதி அலி அப்தொல்லாஹியும், புரட்சிகர பாதுகாப்பு படையின் விண்வெளி படை தளபதி மஜித் மூசாவியும் அந்த வளாகத்தின் வெவ்வேறு பிரிவுகளை ஆய்வு செய்வது காட்டப்பட்டது.

அந்த வளாகம் எங்கு அமைந்துள்ளது அல்லது அந்த பயணம் எப்போது படமாக்கப்பட்டது என்றோ அவர்கள் வெளியிடவில்லை.

பிராந்தியத்தை தாண்டி விரிவடையும்: அந்த காணொளியில், டிரெய்லர்கள் அல்லது தாங்கிகளில் வரிசையாக வைக்கப்பட்ட பெரிய ஏவுகணைகள், ராணுவ லாரிகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள், ஈரானிய கொடிகள் மற்றும் ஐ.ஆர்.ஜி.சி. பதாகைகள் ஆகியவற்றை கொண்ட ஒரு பிரம்மாண்டமான நிலத்தடி சுரங்க வளாகம் காட்டப்படுகிறது.

இருப்பினும், இந்த வருகை வாஷிங்டனுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்தது. மற்றொரு தாக்குதலை எதிர்கொண்டால், ஈரான் தனது பதிலடியை மத்திய கிழக்குக்கு அப்பாலும் கொண்டு செல்லக்கூடும் என்று அப்தொல்லாஹி கூறினார்.

“எதிரி நமக்கு எதிராக மீண்டும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால், நமது பதிலடி இந்த பிராந்தியத்தையும் தாண்டி விரிவடையும்,” என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.