;
Athirady Tamil News

பல்கேரியாவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – 12 பேர் உயிரிழப்பு

0

சோபியா,

ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு அதிகாலை நேரங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு மிக அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது.

விபத்து

இந்த நிலையில், பல்கேரியாவின் தலைநகர் சோபியாவையும், கிழக்குப் பகுதியிலுள்ள புர்காஸ் நகரையும் இணைக்கும் ஏ1 பிரதான நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.

பனிமூட்டம்

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக முன்னால் விபத்து நடந்திருப்பது தெரியாமல், அடுத்தடுத்து வந்த நூற்றுக்கணக்கான கார், லாரி மற்றும் பஸ்கள் ஒன்றின் பின் ஒன்றாக அதிவேகமாக முட்டி மோதி உருக்குலைந்தன.

12 பேர் உயிரிழப்பு

இந்த தொடர் விபத்தில், சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை போலீசார் தீவிரமாக மீட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.