சர்வதேச அரங்கில் யாழ்ப்பாணத்திற்குப் பெருமை சேர்த்த வீராங்கனை
;
இந்நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலரை சந்தித்துக் கலந்துரையாடிய வீராங்கனையும் மற்றும் போட்டிகளில் பங்குபற்றிய ஏனைய வீராங்கனைகளும் சர்வதேச மட்டத்திலான தெற்காசியப் போட்டியில் தமது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி இலங்கைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமைக்காக மாவட்ட செயலர் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ரவீந்திரன் மதுரா, கோனேஸ்வரன் மெற்றிலிடா, ரஞ்சித் நிமாலினி, செந்தில்நாதன் ராஜேஸ்வரி மற்றும் அலோசியஸ் மேரி தங்கனா ஆகியோரும் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் பரவலாக பங்குபற்றினார்கள் என்பதுடன், கோனேஸ்வரன் மெற்றிலிடா என்பவர் இறுதிப் போட்டியிலும் பங்குபற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.