;
Athirady Tamil News

ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்தது உக்ரைன்தான் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு தகவல்

0

கீவ்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 4 ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் ராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வரு கிறது. இந்நிலையில், லிபியா கடற்பகுதியில் சென்ற ரஷியாவின் அதிநவீன போர்க்கப்பல் ஒன்று சமீபத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருப்பதை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தற்போது உறுதிப்படுத்தியுள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், உக்ரைனில் தயாரிக்கப்பட்ட 7 கடற்படை டிரோன்க ளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 2023-ம் ஆண்டு ரஷிய கடற்படையில் இணைக்கப்பட்ட புதிய ரக போர்க்கப்பல் இதில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் ஆக்கிரமிப்புக்குத் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.