;
Athirady Tamil News

விகாரையில் மணி அடிக்கும் நாய்; இலங்கையில் பலரையும் வியக்க வைத்த ஐந்தறிவு ஜீவன்!

0

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் செல்வ சந்திதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிகாமத்திற்கு பாத யாத்திரை சென்ற சுப்பிரமணியன் எனும் நாய் மக்கள் மத்தியிலும் சமூகவலைத்தளங்களிலும் பிரசித்தி பெற்றது.

இந் நிலையில் தற்போது ஹெம்மாத்தகம, மெதிலிய பண்டைய விகாரையில் வசிக்கும் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க ‘நாய் இலங்கை மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளது. ரெக்ஸ்’, ‘சூட்டி புதா’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

பக்தர்களுக்கு முன்னரே சென்று மணியடிப்பது

விகாராதிபதியும் ஓய்வுபெற்ற அதிபருமான இலுக்ககொட ஞானானந்த தேரரின் செல்லப் பிராணியாகச் வளர்ந்து வரும் இந்த நாய், ஒவ்வொரு நாளும் புத்த பூஜை வைக்கப்பட்ட பின்னர், பக்தர்களுக்கு முன்னரே சென்று மணியடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

மணியடிப்பதை நிறுத்துமாறு தேரர் கட்டளையிடும் வரை ரெக்ஸ் தொடர்ந்து மணியடித்துக் கொண்டே இருக்கும்.மணியடித்து முடித்த பின்னர் அதன் அடுத்த கடமையை தொடங்கும். முற்றத்திலிருந்து ஒரு கல்லை வாயில் கவ்வி வந்து, அதனை விகாரைக்குள் வைத்து, மணியடித்து விட்டதாகத் தேரருக்கு அறிவிப்பது அதன் அன்றாட வழக்கமாகும்.

பௌர்ணமி தினங்களிலும் ஏனைய சமய நிகழ்வுகளின் போதும், தர்ம உபதேசங்கள் நடைபெறும் இடத்தில் அமைதியாக இருந்து, உபதேசம் முடியும் வரை அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பது ரெக்ஸின் தனித்துவமான பண்பாகும்.

தர்மப் பாடசாலை நடைபெறும் நாட்களில் சிறிய பிள்ளைகளுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்புடனும் நேரத்தைச் செலவிட ரெக்ஸ் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், விகாரையின் பாதுகாப்பு விடயத்திலும் ரெக்ஸ் மிகுந்த கவனத்துடன் செயற்படுவதுடன், தேரர் விகாரையில் இல்லாத சமயங்களில் எவரையும் ஆவாசத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை.

மேலும், தேரர் மீண்டும் வரும் வரை உணவு மற்றும் பானங்களைக் கூட உட்கொள்ளாமல் இருக்கும் பழக்கமும் ரெக்ஸிடம் உள்ளது.

விலங்குலகில் காணப்படும் இது போன்ற நற்குண நடத்தைகள், மனிதர்களாகிய எமக்கும் சமய பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் பாசம் குறித்த அழகான பாடத்தைக் கற்றுத் தருவதாகவும், ரெக்ஸின் இறுதி மிருகப் பிறவி இதுவாகவே இருக்கும் எனத் தான் நம்புவதாகவும் ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.