;
Athirady Tamil News

சீனாவில் இருந்து வங்காளதேசத்துக்கு கப்பலில் கடத்த முயன்ற 400 டன் ரசாயனம் பறிமுதல்

0

ஜகர்த்தா,-

சீனாவின் லியான்யுங்காங் துறைமுகத்தில் இருந்து வங்காளதேசத்தின் மோங்லா துறைமுகத்திற்கு ‘எம்.வி. ஸ்டார் லைன்’ என்ற சரக்குக் கப்பல் சென்றது. அதில் 36 கன்டெய்னர்கள் இருந்தன. இக்கப்பல் வழக்கமான கடல் பாதையில் செல்லா மல் திசைமாறிச் சென்றதுடன், தகவல் தொடர்பு அழைப்புகளுக்கும் பதிலளிக்க வில்லை.இதனால் வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந் தோனேசிய கடற்படையினருக்கு அக்கப்பல் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனைய டுத்து, கப்பலை வழிமறித்து கடற்படையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.

ரசாயனம்

அதில் இருந்த சரக்கு ஆவணங்களில் பல முரண்பாடுகள் இருந்தன. இதனைய டுத்து கப்பல் முழுவதும் தீவிர சோதனை செய்யப்பட்டது. அதில் 15 கன்டெய் னர்களில் 405 டன் சோடியம் பெர்குளோரேட் ரசாயனமும், லட்சக்கணக்கான பதிவு செய்யப்படாத 4ஜி சிம் கார்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபி டிக்கப்பட்டது. இவற்றுடன் கப்பலை இந்தோனேசிய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

சோடியம் பெர்குளோரேட் என்பது ஏவுகணை மற்றும் ராக்கெட்டுகளின் எரிபொ ருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனமாகும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் மூலமாக சுமார் 100 ஏவுகணைகளைத் தயாரிக்க முடி யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன மாலுமிகள் கைது

மேலும், இந்தக் கப்பலின் உரிமையாளர் குறித்த தகவல் இல்லை என அதிகாரி கள் தெரிவித்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவின் கொமோரோஸ் நாட்டு கொடியுடன் வந்த இக்கப்பலுக்கான அனுமதி காலம் அக்டோபர் 8-ம் தேதியுடன் முடிவடைந் துவிட்டதாகவும் தெரிவித்தனர்.கப்பலில் இருந்த 12 சீன மாலுமிகளிடம் கடற்படையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தக் கப் பல் குறித்துத் தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என வங்காளதேசத்தின் மோங்லா சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.