;
Athirady Tamil News

என்விடியாவின் சி.இ.ஓ.வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்

0

நியூயார்க்,

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக அதன் நிதிப் பிரிவு தலைவரான கோலெட் கிரெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜென்சன் ஹுவாங்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்விடியா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குத் தேவையான சிப்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. கடந்த 1993-ம் ஆண்டு இந்நிறுவனத்தை தொடங்கிய ஜென்சன் ஹுவாங், 33 ஆண்டுகளாக அதன் தலைமை பொறுப்பில் இருந்து வந்தார்.

அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகள்

63 வயதான ஜென்சன் ஹுவாங், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. குறிப்பாக, சீன உளவாளி என அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானது. மேலும், தனக்குக் கீழ் பணியாற்றும் என்விடியா நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பர்லி பவலுடனும் அவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விவகாரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜென்சன் ஹுவாங் தனது மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொண்டு நிறுவன ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

மீண்டும் பதவி

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். மேலும், அவருக்கு சி.இ.ஓ பதவியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், என்விடியாவின் சி.இ.ஓ.வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிஇஓ மட்டுமின்றி, நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.