யாழ்.பல்கலை மாணவன் போதைப்பொருளுடன் கைது
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாணவன் தங்கி இருந்த அறையை சோதனையிட்ட போது , போதை மாத்திரைகள் , தடை செய்யப்பட்ட லேகிய பொதிகள் என்பவற்றை…
பரீட்சைகள் திணைக்களத்தின் அசமந்தம்; கடும் சிரமத்திற்குள்ளான ஆசிரியர்கள்
புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தினால் இன்று (2023.12.20) காலை பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
வினாத்தாள் மதிப்பீட்டிற்காக…
சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு!
சீனாவில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தில்…
அவையில் இல்லை – வாரணாசியில் உரையாற்றும் மோடி, அமித் ஷா – எதிர்க்கட்சிகள்…
மக்களவை அத்துமீறலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை விவகாரம்
சென்ற வாரம், எம்.பி.க்கள் அரங்கிற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் தற்போது வரை நாடாளுமன்றத்தின் அவைகளில்…
யாழ்.புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம் ; 6 பேர் கைது – மாணவர்களுக்கு கடும்…
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு , அவர்களை…
யாழ் பல்கலைக்கழகத்தினுள் அரைகுறை ஆடையுடன் சென்றவர்களால் வெடித்த சர்ச்சை
யாழ் பல்கலைக்கழகத்தினுள் அரைகுறை ஆடையுடன் சென்றவர்கள் , அங்கிருந்த காவலாளிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
பல்கலைகழகங்களில் மரபு ரீதியான ஆடையுடன் மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் அனைவரும்…
யாழ்.பல்கலைக்குள் அரைக்காற்சட்டையுடன் செல்ல முற்பட்ட நபர் ; வைரலாகியுள்ள காணொளி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவின் சில திரைப்படங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும்…
யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் பாஸ் நடைமுறை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (PASS) அமுல்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த்…
நிறுத்தப்படும் கல்வி செயற்பாடுகள்! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின்…
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு : வாயு மாசுபாடு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ள நிலையில், வாயு மாசுபாடு அதிகரிக்கக் கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் நேற்றிரவு இந்த எரிமலை வெடிக்க…
ரஜினி முதல் அதானி வரை., ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படும் பிரபலங்கள்,…
அயோத்தியில் ராமர் கோயில் சிலையை நிறுவ ராம ஜென்மபூமி அறக்கட்டளை விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ராமாலய சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு புத்த மத தலைவர் தலாய் லாமா முதல் பிரபல தொழிலதிபர் அதானி வரை பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக…
22 பாடசாலைகளுக்கு மின்சாரம் இல்லை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மாத்தறை மாவட்டத்தின் வலயக் கல்விப் பிரிவில் ஐந்து தேசிய பாடசாலைகள் உட்பட 22 பாடசாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறை
பாடசாலைகளின்…
பண்டிகை காலங்களில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கோவிட் - 19 பெருந்தொற்று காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களை மீண்டும் கடைப்பிடிப்பதன் மூலம், வைரஸ் நோய் தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என ரிட்ஜ்வே மருத்துவமனையின் சுவாச நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.…
1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
கடந்த ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு…
நெல்லியடியில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , இரண்டு…
உறக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்
புத்தளத்தில் இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரக்கல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஹசித் சந்தருவன் பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி…
கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை…
இலங்கையில் மீண்டும் கொவிட் கால கட்டுப்பாடுகள் : மக்களுக்கு சுகாதாரதுறை எச்சரிக்கை
தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கொவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன்…
இரண்டு குழுக்களுக்கு இடையே கடும் மோதல்: பெண் உட்பட ஐவர் மீது வாள் வெட்டு
ஹப்புத்தளை பெரகலை சந்தியில் 18 பேர் கொண்ட இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை…
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்!
ஐபிஎல் தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார Nuwan Thushara வாங்கப்பட்டுள்ளார்.
2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக மினி ஏலம் நேற்றைய தினம் டுபாயில் இடம்பெற்றது.
இந்த ஏலத்தில் இலங்கை…
வேலைவாய்ப்பிற்காக சென்ற இலங்கையர்களிடம் இலஞ்சம் கேட்டு அச்சுறுத்தும் பயங்கரவாதிகள்
தாய்லாந்துக்கு வேலைக்குச் சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரில் பயங்கரவாத கும்பலொன்றின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணினி துறையில் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் தற்போது மியான்மரில் பயங்கரவாதிகளின்…
கூகுள் வழங்கிய தகவல் : கொழும்பில் முதன்முறையாக கைது செய்யப்பட்ட இளைஞன்
தனது உறவினரை 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வு புரிந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் ஆபாச படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் சிறிலங்கா காவல்துறையளினருக்கு…
இலங்கையில் பெரிய வெங்காயம் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி!
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 650 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் பெரிய சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான நிலையில்,…
இந்திய நாடாளுமன்றத்தில் இடைநிறுத்தப்பட்ட 141 உறுப்பினர்கள்: வெளியான காரணம்
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவர்களின் நாடாளுமன்ற…
இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் மழையுடனான வானிலை நாளை (20-12-2023) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்ட இளஞ்செழியன்
2024 ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் (18.12.2023) கொழும்பில் இடம்பெற்றது.
இந்த…
யாழில் பெரும் துயர சம்பவம்: பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாண பகுதியொன்றில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் ஆண் குழந்தையே இவ்வாறு நேற்றுமுன் தினம்…
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 21ம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு மாவட்ட…
யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள…
யாழ்.மாவட்டம் முழுவதும் பொலிஸார் விசேட நடவடிக்கை – 70 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை…
கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியிருந்த தாய்,மகள் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக்கொலை
காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியிருந்த தாய் மற்றும் மகள் இஸ்ரேலியய சினைப்பர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேல் மீது வெள்ளை மாளிகை கவலை தெரிவித்துள்ளது.
"இந்த குறிப்பிட்ட சம்பவம் குறித்து இஸ்ரேலிய…
யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள்; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ள சம்பவம் ஒன்று தாய்வானில் பதிவாகியுள்ளது.
தாய்வானில் சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும்…
அமெரிக்காவில் பயங்கர விபத்தில் சிக்கிய விமானம்: 3 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (18-12-2023) மாலை 5 மணியளவில் ஓரிகான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில்…
5,000 அமெரிக்க வைரக்கற்களால் உருவான அயோத்தி ராமர் கோவில் வடிவ நெக்லஸ்: வியாபாரியின்…
5,000 அமெரிக்க வைரக்கற்களால் உருவான அயோத்தி ராமர் கோவில் வடிவ நெக்லஸை வைர வியாபாரி ஒருவர் கோவிலுக்கு பரிசாக அளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில்
இந்திய மாநிலமான குஜராத், வைர வியாபாரத்தில் முன்னிலை வகிக்கிறது. உலகின் மிகப்பெரிய வைர…
கோடி கோடியாக குவித்துள்ள ஹமாஸ் படைகள்… நீண்ட கால போருக்கு அஞ்சாது: வெளிவரும் பின்னணி
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால், இஸ்ரேல் அறிவித்துள்ள நீண்ட கால போருக்கும் அவர்கள் அஞ்சப்போவதில்லை என்றே கூறப்படுகிறது.
அதன் பொருளாதார பின்னணி
ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேல் இதுவரை…