விரைவில் மின்சார கட்டண திருத்தம் !!
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்து வருவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மீளாய்வு…
சீனாவிடமிருந்து, இலங்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி!!
25 இலட்சம் டொலர் பெறுமதியான அரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.
இதற்கமைவாக, இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வருடங்கள்…
நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா!! (படங்கள், வீடியோ)
வரலாற்று சிறப்பு மிக்க நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கூட்டுத்திருப்பலியுடான திருச்சூருவப்பவனி இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கோடி அற்புதராம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் ஆலயத்தின் திருஉருவ…
அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்!!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துப்படி அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்பட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல்…
சுகவாழ்வுக்கு சவாலாகும் நீரிழிவு நோய் !! (மருத்துவம்)
இன்று மிக வேகமாகப் பரவி வருகின்ற தொற்றா நோய் நீரிழிவாகும்.பொதுவாக தொற்று நோய்கள் தான் சமூகத்தில் வேகமாகப் பரவுவதை அறிவீர்கள்.ஆனால் புத்தாயிரமாண்டின் ஆரம்பத்திலிருந்து மிக வேகமாகப் பரவலாகி மருத்துவ உலகுக்கும்,மக்களுக்கும் பெரும் சவாலாக…
இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த குழுவினர் மீது மின்னல் தாக்குதல்!!
மாவனெல்ல பிரதேசத்தில் இன்று (26) மாலை இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவனல்லை பாமினிவத்தை மயானத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் சுமார்…
யாழ்ப்பாணத்தில்”வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்” எனும்…
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் "வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்" எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
இன்றையதினம்…
மின் நிலையங்களுக்கு 9,000 தொன் எரிபொருள் !!
கடந்த வியாழக்கிழமை (24) முதல் செயலிழந்திருந்த கெரவலப்பிட்டிய உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களுக்கு 9,000 மெற்றிக் தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த வாரம்…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் – கஜேந்திரகுமார்! (வீடியோ)
13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது!!
காசல்ரீ நீர் தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளது.
ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில்…
சிபெற்கோவும் விலையை அதிகரிக்குமா?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெற்கோ), தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பெற்றோல் விலையை மீண்டும் உயர்த்துவதற்கான லங்கா ஐஓசியின் தீர்மானம் குறித்து…
அமைச்சர்கள் பறக்க கட்டுப்பாடு !!
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.…
பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப்…
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…
IMF அறிக்கை குறித்து மத்திய வங்கியின் கருத்து !!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுப்புரை 4 அறிக்கை தொடர்பான கருத்துக்களை இலங்கை மத்திய வங்கி, இன்று (26) பிற்பகல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் மத்திய வங்கி கருத்துக்களை வெளியிட்டிருந்த போதும் அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறு…
இந்தியா செல்லும் இலங்கை அகதிகளுக்காக குடியிருப்பு அமைக்கும் பணிகள்…!!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள்…
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் வௌியிட்ட அறிக்கை!!
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது Article iv அறிக்கையை நேற்று (25) வெளியிட்டது.
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நீண்ட ஆய்வுக்கு…
பெண்ணை காப்பாற்ற சென்று உயிரை விட்ட இளைஞர்கள்!
ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சீதாவக ஆற்றின் தெஹியோவிட்ட யோகம பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாத்திரை சென்ற குழுவினரில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணை இரண்டு இளைஞர்கள்…
காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்!!
"கண்டி மாவட்ட தோட்ட மக்களின் காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்" என கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற…
இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் மார்ச் 28 முதல் 30 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய…
எரிவாயு கேஸ் கொள்வனவுக்காக இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்கும்…
காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று 2022.03.26 அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என…
“மோசடியான ஒப்பந்தத்தால் மின்சாரக் கட்டணம் கூடும்” !!
எரிபொருள் தொடர்பாக தென்னாபிரிக்க நிறுவனமொன்றுடன் அரசாங்கம் பாரிய மோசடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அந்த மோசடி ஒப்பந்தம் காரணமாக எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
வெளியேயா? உள்ளேயா? கொக்கரிக்கிறது சேவல் !!
இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளதென தகவல்கள் கசிந்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 23 ஆம் திகதியன்று…
காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது!!
மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள் ஆலயங்கள் தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளன.
குறித்த…
50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு!!
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
அடக்க முடியாமல் சிரித்த ஸ்டாலின்.. அமைச்சர் சொன்னது என்ன.? (வினோத வீடியோ)
அடக்க முடியாமல் சிரித்த ஸ்டாலின்.. அமைச்சர் சொன்னது என்ன.?
யாழ் மாவட்ட பொருளாதாரத்தை யாழ் விவசாயிகள் மீண்டும் கட்டமைப்பார்கள்.!! (படங்கள், வீடியோ)
இது யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான யுகமாகும். யாழ் மாவட்ட பொருளாதாரத்தை யாழ் விவசாயிகள் மீண்டும் கட்டமைப்பார்கள்.
யாழ் மாவட்டத்தில் நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று (25.03.2022)…
யாழ் மாநகர சபை அமர்வில் பொலிஸாருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!!
யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபனால் இன்றைய யாழ் மாநகர சபை அமர்வில் பொலிஸாருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20 திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன் போது வலிந்து…
யாழ் மாநகர சபையின் அமர்வு அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டது.!! (படங்கள், வீடியோ)
டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை சபை மண்டபத்தில்…
2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கும் சீனா!!
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள…
IOC பெற்றோல் விலை அதிகரிப்பு!!
இன்று (25) நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலையை 49 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.
ஆனால் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே…
220 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!
தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (25) காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…
சளித்தொல்லையில் இருந்து விடுபட… !! (மருத்துவம்)
100 கிராம் பனங்கருப்பட்டியுடன் ½ மேசைகரண்டி சுக்குப் பொடி, ¼ மேசைக்கரண்டி மிளகுத் தூள் இம்மூன்றையும் நன்றாக கலந்து,
சம அளவில் நான்கு பங்குகளாக பிரித்து, ஒருநாளைக்கு நான்கு வேளையாக உண்டுவந்தால் தடிமல், சளி, இருமல், சளியுடன் கூடிய அனைத்து…
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம்!!…
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம் - ஒருவர் வைத்தியசாலையில்
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழுவினர்…