மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக…
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக கைவாங்க வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க…
இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி
இந்தியா ஏவிய போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை விரட்டியடித்ததாக பாகிஸ்தான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளதென 2 மணி அளவில் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட…
பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்; நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் கப்பல் கட்டணம் குறைப்பு
தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
நாகை - யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு…
கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; பரிதாப மரணம்
கொழும்பு - கொட்டாஞ்சேனை , கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.…
பல்கலை மாணவன் மரணம்; கல்வி அமைச்சின் அதிரடி
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
கோயில் சுவர் இடிந்து 9 பக்தர்கள் பலி; பலர் படுகாயம் – நிவாரணம் அறிவிப்பு
கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவர் விழுந்து விபத்து
ஆந்திரா, சிம்மாச்சலத்தில் அப்பனசுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது இரவு 12 மணியை அடுத்து அப்பகுதியில்…
யாழில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம்…
அதிகரிக்கும் பதற்றம்… பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த அதிரடி முடிவு
பாகிஸ்தானுக்குச் சொந்தமான மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் தனது வான்வெளியை மூடுவதன் மூலம் இந்தியா பரஸ்பர நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.
அனைத்து விமானங்களுக்கும்
இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும்…
ரஷ்யாவுக்காக போரிட்ட 4700 வடகொரிய வீரர்கள் பலி ; தென்கொரியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ரஷ்யா இடையேயான போரானது மூன்று ஆண்டுக்கும் மேல் தொடங்கி நடந்து வருகின்றது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவுக்கு உதவுவதற்காக வடகொரியா தனது வீரர்களை அனுப்பியதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்…
உலகின் மூத்த பெண் 116 வயதில் மரணம்!
உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதியன்று பிறந்த இவர் 1934-ல் இரண்டாம்…
இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை!
ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொஸாத் அமைப்பின் மூத்த உளவாளியாகக் கருதப்பட்டவர் மொஹ்சென் லங்கார்நெஷின். இவர்,…
ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள…
மே தினம் பேரணி
தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த பேரணி நகர் பகுதி…
வலி வடக்கில் 40 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.1 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐகம்பத்தினால் ஒரு தொகுதி உயர் பாதுகாப்பு வலயக்…
இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
‘இதுதொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களிடமும்…
தெல்லிப்பழை வைத்தியசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி தொழிற்சங்க நடவடிக்கை
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் , வைத்தியசாலையின் நிர்வாக சீர்குழைவுகளை கண்டித்தும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
நாளைய தினம்…
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருத்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை தவறி விழுந்தவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி…
யாழில் நிலவும் அதீத வெப்பம் – நேற்றும் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பமான கால நிலையால் , நேற்றைய தினம் புதன்கிழமை வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் (வயது 55) என்பவரே…
இரத்தம் சிந்தப்படவேண்டும்… பிரித்தானியாவுக்கு ரஷ்யா விடுத்துள்ள பயங்கர எச்சரிக்கை
புடின் ஆதரவாளர் ஒருவர் பிரித்தானியாவுக்கு மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானிய இரத்தம் சிந்தப்படவேண்டும் என்று கூறியுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இரத்தம் சிந்தப்படவேண்டும்...
கிரெம்ளின்…
யாழ் . கலைஞர்களின் பங்கேற்புடன் தென்னிந்தியாவில் உருவாகும் திரைப்படம்
ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் “மைனர்”. இப்படத்தின் பூஜை நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
Arabi production & Viyan ventures மற்றும் May Day…
தொலைபேசிக்காக 11-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் ; இறுதியில் நேர்ந்த துயர்
தொலைபேசியில் வெகுநேரமாக பேசியதை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் 11-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பையில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் 11வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் இளம்பெண் சமிக்சா (20…
தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு ; பலி எண்ணிக்கை தொடர்பில் வெளிவந்த தகவல்
இவ் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.…
யாழில் வீதியால் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
யாழ் . போதனா பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பில்
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப் . போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் , பாதுகாப்பு…
ஸ்வீடனில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி… 16 வயது சிறுவன் கைது!
ஸ்வீடன் நாட்டில் சாலையில் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
உப்சலா நகரத்தில் வக்சலா சதுக்கத்தின் அருகில் கடந்த ஏப்.29 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது…
சினிமா பாணியில் நடந்தேறிய கொலை ; இளைஞன் செய்த கொடூர செயல்
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர காவல் நிலையத்தில் கிடைத்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
67 வயதான அக்கரகல்கொட லுனுகம்வெஹர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு…
பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கா் தளபதி உதவி: என்ஐஏ விசாரணையில் தகவல்
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முன்னணி தளபதி பரூக் அகமதின் ஆதரவாளா்கள் உதவியிருக்கலாம் என்பது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் தெரிய…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காங்கேசன்துறைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்…
பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் ; விசாரணைகளில் புதிய திருப்பம்
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படும் நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் மரணம் தொடர்பான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த…
அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று தற்கொலை செய்த இந்திய தொழிலதிபர்
அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14 வயது மகன் துருவா கிக்கேரியை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.…
எதிர்காலத்தில் சந்திப்போம் ; கனடா பிரதமருக்கு ட்ரம்ப் வாழ்த்து
கனடா பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின், அண்டை நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்து அறிவித்துள்ளார்.…
2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான…
2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (30.04.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்…
திவாலான பாகிஸ்தானில் 1.5 டன் ஏசியின் விலை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி தகவல்
திவாலான பாகிஸ்தானில் 1.5 டன் ஏசியின் விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏசியின் விலை எவ்வளவு?
திவாலான பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, அன்றாடப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் விலைகள் இந்தியாவுடன்…
ரஷ்ய இராணுவத்திற்கு உதவ ராணுவ குழுக்களை அனுப்பிய வடகொரியா!
உக்ரைனுடனான தற்போதைய மோதலில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உத்தரவின் பேரில் இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…